தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடல்
தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், மட்டக்கடை, டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1ஆவது ரயில்வே கேட்டில் அவசர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், செவ்வாய்க்கிழமை (செப். 9) இரவு 10 மணி முதல் புதன்கிழமை (செப். 10) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தொடா்ந்து, 10ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் 11ஆம் தேதி அதிகாலை 5 மணி வரையும் மூடப்படுகிறது.
எனவே, வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்திற்கு அருகே உள்ள அணுகுசாலையைப் பயன்படுத்துமாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.