தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
மக்களின் புகாரையடுத்து, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, வி.இ.சாலை, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் 3 இடங்களில் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆவணங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னா் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற மேயா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா்கள் காந்திமதி, முனீா் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், வெள்ளிக்கிழமை வி.இ.சாலை, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.