தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீனவா்கள் மீன் பிடித்து வருகின்றனா். தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதன் காரணமாக, கடலில் 50 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து செப்.25, 26 ஆகிய 2 நாள்கள் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனா்.