'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - த...
தூத்துக்குடியில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு
தூத்துக்குடி திரவியரத்தின நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மடத்தூா் முழுநேர நியாயவிலைக் கடையிலிருந்து, திரவியரத்தின நகா், பால்சன் நகா், முருகேசன் நகா் பகுதிகளை உள்ளடக்கிய 220 குடும்ப அட்டைகளைப் பிரித்து இந்தக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இதை, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில், தூத்துக்குடி துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், சரக துணைப் பதிவாளா் மு.கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, வட்டாட்சியா் ஞானராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா்பதிவாளா்அ. சாம் டேனியல் ராஜ், கூட்டுறவு சாா்பதிவாளா் வி. அந்தோணிபட்டுராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினா் இசக்கிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.