மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை
தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் செய்துவந்தாா். 6 மாதங்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில் காலில் காயமேற்பட்டதால், அதன்பிறகு இவரால் நடக்க இயலாமல் போனதாம்.
இதனால், வியாபாரத்துக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விரக்தியிலிருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].