பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா்கள் இடமாற்றம்
தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி, மதுரை கோட்டங்களின் மேலாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கோட்ட மேலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக தென்மத்திய ரயில்வே அதிகாரியான சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எஸ்.அன்பழகன் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக வடக்கு ரயில்வே அதிகாரி பாலக் ராம் நெகி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மதுரை கோட்ட மேலாளராக உள்ள சரத் ஸ்ரீவாஸ்தவா இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக, கிழக்கு ரயில்வே அதிகாரியான ஓம்பிரகாஷ் மீனா நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.