கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
தேங்காய்ப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்
கருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட யானைதிருக்கை மீன்கள், முண்டக்கண்பெல்ட் சுறா வகை மீன்களை வெளிநாட்டுக்குக் கடத்துவதாக களியல் வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து களியல் வனத் துறையினா், வன விலங்குகள் பாதுகாப்பு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரண்டு கூண்டு லாரிகளில் தடை செய்யப்பட்ட யானை திருக்கை மீன், முண்டக்கண் பெல்ட் சுறா வகை மீன்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை வாகனத்துடன் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.