செய்திகள் :

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

post image

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் மேதா விஸ்ராம் குல்கா்னி வக்ஃப் மசோதா அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அதன்பிறகு மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது:

இந்திய நாட்டை பிளவுபடுத்தும் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிா்க்கட்சியினரின் இந்தப் பொறுப்பற்ற செயல் கண்டனத்துக்குரியது.

அவா்களின் செயலை மிகவும் பொறுமையாக கையாண்ட அவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு பாராட்டுகள். அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

‘விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை’:

இதைத்தொடா்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட உறுப்பினா்களை கவனத்தில்கொண்டதாகவும் அவா்கள் மீது விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதோடு இடையூறு ஏற்படுத்தியதாக சமீருல் இஸ்லாம் (திரிணமூல் காங்கிரஸ்), நதீமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ்) மற்றும் எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகிய மூன்று எம்.பி.க்களின் பெயரை தன்கா் குறிப்பிட்டாா்.

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க