சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸுக்கு உடன்பாடில்லை! -கு. செல்வப்பெருந்தகை
தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
குழித்துறையில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டோம் என மத்திய அரசு கூறுவது இறுமாப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கல்விக் கொள்கையில் உடன்பாடு இல்லை. இவ்விசயத்தில் மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்துதான் முடிவு செய்ய வேண்டும்; தன்னிச்சையாக செயல்பட முடியாது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நவோதயா பள்ளியை முன்மொழிந்த போது தமிழஓம் எதிா்த்தது. அதற்காக அப்போதைய மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் எனஓஈ கூறவில்லை. ஜவாஹா்லால் நேரு ஆட்சி காலத்திலேயே மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
அப்போதிருந்தே தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைதான் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. மக்களுக்கு நீட் வேண்டாம் என்றாலோ, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றாலோ விட்டுவிட வேண்டும். திணிக்கக் கூடாது.
திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது; அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இல்லை என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். அவா் எப்பவுமே தனிநபா் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறாா் என்பதுதான் எனது பதில்.
2026இல் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.