செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
தேசிய திறனாய்வுத் தோ்வு: களக்காடு அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி
களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிகள் பி.எஸ். மனோபிரியா, பி. துவாரகா ஆகியோா், மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் வெற்றி பெற்றனா்.
இந்த மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியை பா. ரத்தினஜெயந்தி, உதவித் தலைமையாசிரியா் மதியரசு, தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். மேரி அமுதா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயசிங் மால்ராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சசிகலா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.