தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள பாலத் தடுப்பை சீரமைத்துத் தரக்கோரிக்கை!
கந்தா்வகோட்டை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாழை வாரி பாலம் சேதமடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தில் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்று. கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த நான்குவழிச் சாலையில் போக்குவரத்து வாகனங்களை விட கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த நான்குவழி சாலையில் உள்ள தாழை வாரி பாலம் அருகில் குறுகலான வளைவுப் பகுதியில் இருப்பதால் நீண்டதூர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பாலத்தில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிா்ப் பலியும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் 3 விபத்துகள் நேரிட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். ஆகையால் தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் சாலையின் இருபுறமும் முன்னெச்சரிக்கை விளக்குகள் அமைப்பதுடன், சேதமடைந்த பாலத்தை சீரமைத்துத் தர வேண்டும் எனவும்
வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கைவைக்கின்றனா்.