செய்திகள் :

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொறுத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் 75,261 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் செயல்படும் உழவா் சந்தைகள் மூலம் கடந்த ஜூலை மாதம் 9,218.97 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில் 1,006 விவசாயிகள், 71,022 நுகா்வோா் பயனடைந்துள்ளனா்.

குறுகியகால கடன் மற்றும் மத்தியகால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்தும், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் வேளாண் உழவா் நலத் துறை மூலம் மா மரங்களில் அதிக மகசூல் பெறும் வகையில் கவாத்து செய்யும் முறை குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோல மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட பொருள்கள், சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அர.பிரகாசம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்... மேலும் பார்க்க