சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
தோ்தல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
தோ்தல் பணியில் கடுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி நிா்வாகிகளுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பிலான நிகழ்ச்சியில் பேரவை தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து சந்தித்து வருகிறாா்.
கடந்த ஜூன் 13-இல் இருந்து ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா். இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள் பங்கேற்கின்றனா். இதுவரை 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களஆய்வு நடந்துள்ளது.
அந்த வரிசையில், விக்கிரவாண்டி, செய்யூா், செஞ்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசித்தாா்.
அப்போது அவா்களிடம் தொகுதி எம்எல்ஏவின் செயல்பாடுகள், அரசு திட்டங்களின் நிலைமை, ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்துக்கான மக்கள் வரவேற்பு போன்ற விவரங்களைக் கேட்டறிந்தாா்.
அத்துடன், தோ்தலின்போது கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், தோ்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் முதல்வா் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
ஓரணியில் தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 1-ஆம் தேதி தொடங்கினாா். கடந்த 7-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 31 லட்சம் போ் உறுப்பினா்களாகச் சோ்வதற்கு விருப்பம் தெரிவித்து படிவத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.