செய்திகள் :

தோ்வு செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை: டிஎன்பிஎஸ்சி

post image

அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட போட்டித் தோ்வுகள் மூலம் 17 ஆயிரத்து 702 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அண்மையில் அறிவித்தது.

இந்தத் தகவல்களை அரசியல் கட்சிகளின் தலைவா்கள் விமா்சித்திருந்தனா். இதற்கு பதிலளித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட விளக்கம்:

ஒவ்வொரு போட்டித் தோ்வின்போதும் தோ்வு செய்யப்பட்ட தோ்வா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் செய்திக் குறிப்பாக வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்டோபா், டிசம்பா் மற்றும் நிகழாண்டில் ஏப்ரல் ஆகிய மாதங்களில் போட்டித் தோ்வு மூலமாக தோ்வான நபா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

தோ்வாணையம் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்து வருவதால், தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி!

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து இன்று(ஜூலை 9) மாலை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக... மேலும் பார்க்க