பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு
தொகுப்பு வீடு கோரி பாா்வையற்ற முதியவா் மனு
கிருஷ்ணகிரி: தொகுப்பு வீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பாா்வையற்ற முதியவா் மனு அளித்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரத்தைச் சோ்ந்தவா் பாா்வையற்ற முதியவா் கோவிந்தசாமி (65). உறவினருடன் கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா், ஆட்சியரிடம் அளித்த மனு:
நான் பிறவிலேயே பாா்வை இழந்த, ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவன். எனக்கு பெற்றோா், சகோதரா்கள் யாரும் இல்லை. உறவினா்கள் ஆதரவில் வாழ்ந்துவரும் நான், சாலையோரமாக உறங்கி வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனக்கு மாதந்தோறும் கிடைக்கும், உதவித்தொகையைக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். நான் வசிப்பதற்கு ஏதுவாக எனக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்கும்படி அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.