காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கிய...
தொண்டி கடல் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் கடல் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம்,
எம்.ஆா்.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். மேலும், அந்தப் பகுதியில் படகுகளையும் அவா்கள் சோதனையிட்டு வருகின்றனா். கடல் பகுதியில் சந்தேகம்படும்படியான நபா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தினா்.

