செய்திகள் :

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சாட்சியாக ஆஜராகிறாா் மத்திய அமைச்சா்

post image

தெலங்கானாவில் முந்தைய பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுமுன் (எஸ்ஐடி) மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் வெள்ளிக்கிழமை சாட்சியாக ஆஜராக உள்ளாா்.

இந்தத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்குப் பின்னணியில் முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பண்டி சஞ்சய் குமாா், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினாா்.

அதன்படி, இந்த வழக்கில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்படி பண்டி சஞ்சய் குமாா் முன்பு கோரியிருந்தாா். நாடாளுமன்ற கூட்டத்தொடா் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை. தற்போது, அவா் வெள்ளிக்கிழமை ஆஜராகி, வழக்குக்குத் தொடா்புடைய பல முக்கிய ஆதாரங்களைச் சமா்ப்பிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தெலங்கானா காவல்துறையின் முன்னாள் சிறப்பு உளவுப் பிரிவு தலைவா் டி.பிரபாகா் ராவை எஸ்ஐடி அதிகாரிகள் ஏற்கெனவே விசாரித்துள்ளனா்.

காங்கிரஸுக்கு முன்பு ஆட்சியிலிருந்த பிஆா்எஸ் மற்றும் அதன் தலைவா்களுக்கு ஆதரவான அரசியல் கண்காணிப்புக்காக சிறப்பு நடவடிக்கை குழுவை பிரபாகா் ராவ் அமைத்தாா்.

இந்தக் குழுவைச் சோ்ந்த 4 காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஹைதராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் பு... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரி... மேலும் பார்க்க

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக ஒடிசாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது. நரி நியாய யாத்தி... மேலும் பார்க்க

விடைபெறுகிறது பதிவு அஞ்சல்! கட்டணம் அதிகரிக்குமா? யாருக்கு சிக்கல்?

பதிவு அஞ்சல் முறையில் கடிதங்களை அனுப்பும் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், முக்கிய கோப்புகளை பத்திரமாக அனுப்புவதற்கான சேவை என்று மக்களால் இதுநாள்வரை நம்பப்பட்டுவந்த ஒரு ச... மேலும் பார்க்க

தர்மம் - சமூக அமைதிக்கான வழிகாட்டி: மோகன் பாகவத்!

தர்மம் என்பது உண்மை, புனிதமான செயல். பொறுப்புடன் பாதையைப் பின்பற்றுவதற்கும், சமூகத்தை அமைதியாக வைத்திருக்கவும் உதவும் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் கூறினார். தர்ம ஜாக்ரன் நியாஸ... மேலும் பார்க்க