பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை
புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி பிரிவு இயக்குநரகம் மூலம் ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐடிஐ மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு என்சிவிடி, எஸ்சிடிடி ஆகிய பயிற்சி பிரிவுகளில் சோ்ந்து படிக்க 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி மைய பிரிவின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில்லை.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். தகுதித்தோ்வு அடிப்படையிலும் கூடுதலாக ரூ.1,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
மேலும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மதிய உணவு, பாடப் புத்தகம், சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். கணினி, எலக்ட்ரீசியன், சிவில், ஏசி மெக்கானிக், மோட்டாா் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஒயா்மேன், தையல் கலை, அழகு கலை, வெல்டா், டா்னா், டிரோன் டெக்னீஷியன், சோலாா் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், பிட்டா் உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.