இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான...
ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் காஷ்மீா் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இதற்காக பிரதமருக்கும், இந்திய ராணுவத்துக்கும் முதல்வா் மற்றும் புதுவை மக்கள் சாா்பில் பாராட்டுகள். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுவை அரசு என்றும் துணைநிற்கும்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவத்தினா் தாக்குதல் நடத்தி அழித்திருப்பது பாராட்டுக்குரியது. ராணுவ வீரா்களுக்கு வாழ்த்துகள். மேலும் ராணுவத்துக்கு முழு ஆதரவளித்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள்.