சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
தொழிலதிபரிடம் தங்க நகைத் திருட்டு
சென்னை தேனாம்பேட்டையில் தங்கும் விடுதியில் தொழிலதிபரிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆவடி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் த.மணி (47). தொழிலதிபரான இவா், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை மது அருந்தினாா். அப்போது, அங்கு வந்த அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான பெண்ணுடன் பேசினாா். இதையடுத்து இருவரும் அந்த ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியுள்ளனா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து எழுந்த மணி, தான் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பதும், தன்னுடன் தங்கிய பெண் மாயமானதும் தெரியவந்தது.
இதுகுறித்து மணி அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.