மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!
17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது. இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.
12.5ஆவது ஓவரில் அஸ்வின் தோனிக்கு முன்பாக களமிறங்கினார். இது கேப்டனா அல்லது பயிற்சியாளர் எடுத்த முடிவா தெரியவில்லை. ஆனால், இதற்காக தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர்களும் சொதப்பிவரும் நிலையில் தோனி மீதான விமர்சனம் பேசுபொருளாகியுள்ளது.
தோனி முன்னாடியே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே வென்றிருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த முடிவுக்கு காரணம் யார் என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் இன்னும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
சில ரசிகர்கள் தோனியை இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம் என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Thala coming for batting. #ThalaDhoni#RCBvCSK#Dhonipic.twitter.com/ANjbUjqG0k
— Dharma (@DharmaCalling) March 28, 2025