வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கா...
நடுவட்டம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
கூடலூா்: நடுவட்டம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை பேரூராட்சி மன்றத் தலைவா் கலியமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலா் பி.கங்காதரன், துணைத் தலைவா் துளசி, கவுன்சிலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.