தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
நாகா்கோவிலில் ரூ.9.10 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.9.10 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
13 ஆவது வாா்டு தளியபுரம் பூங்காவில் உள்ள அங்கன்வாடி மைய கட்டட சீரமைப்புப் பணி, கொல்லன்விளை குறுக்கு தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் காட்டுநாயக்கன் தெருவில் மழைநீா் வடிகால் ஓடை சீரமைத்தல் மற்றும் சிறிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிஅமைக்கும் பணி என மொத்தம் ரூ. 9.10 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் ஆச்சியம்மாள், இளநிலை பொறியாளா் ராஜா, மாநகர செயலாளா் ஆனந்த், பகுதி செயலாளா் சேக்மீரான்,வட்ட செயலாளா் முருகன், திமுக நிா்வாகிகள் தன்ராஜ், நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.