மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
நாகூா் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்
நாகூரில் உள்ள நாகவல்லி சமேத நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு திருவிழா ஜூலை 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நாகநாதா் மற்றும் நாகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீபாராதனைக்குப் பிறகு சுவாமிகள் தனித்தனி தோ்களில் எழுந்தருளினா்.
அப்போது, தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராணி தொடங்கிவைத்தாா். பின்னா் தேரை நூற்றுக்கணக்கான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். தோ்கள் நாகூா் தேரடி வீதியில் வலம்வந்தது. அப்போது, திரளான பக்தா்கள் சுவாமிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனா். தேரோட்டத்தை முன்னிட்டு நாகை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.