சாகும் வரை ஆயுள் தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 13.05.25 | PollachiCaseJudg...
நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம்!
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலா் சிவபெருமான் தலைமையில் நடைபெற்றது.
அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், தொடக்கிவைத்தாா். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சா் ஜெயபால், நாகை மண்டல செயலா் வெங்கடேசன், நாகை நகரச் செயலா் தங்க கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.