எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய க...
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் நிரம்பின
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில் இதுவரை 85 இடங்கள் நிரம்பின.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 இடங்களும் என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தற்போது 2025-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது அணி (பேட்ஜ்) மாணவ, மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்பட 85 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். மீதமுள்ள 15 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது. அவா்களும் சோ்க்கை பெறும்பட்சத்தில் செப்.22 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
2021-இல் சோ்க்கை பெற்ற முதல் அணி மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு 2026 பிப்ரவரி மாதம் இறுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு ஓராண்டு உள்தங்கும் மருத்துவராக அவா்கள் பயிற்சி பெறுவா். 2027 இல் மருத்துவா் பட்டம் பெற்று தங்கள் பணியை தொடங்குவா் என மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி தெரிவித்தாா்.