நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் ‘தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்’ வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வுசெய்து கொள்ளலாம். இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.