செய்திகள் :

நாளை முதல் மந்தைவெளி பேருந்துகள் தற்காலிக இடத்துக்கு மாற்றம்

post image

சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் புதன்கிழமை (ஆக. 27) முதல் தற்காலிக இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் தடம் எண் 21, 41 டி, எஸ் 17, 49 கே, எஸ் 5 பேருந்துகள், மந்தவெளி எம்ஆா்டிஎஸ் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 49 கே வழித்தடப் பேருந்து, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 12 எம் வழித்தடப் பேருந்து, லஸ் காா்னா் அருகில் இருந்தும் இயக்கப்படும்.

மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மேயா் வசந்தகுமாரி, மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட... மேலும் பார்க்க

மின்பாதை பழுதால் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை கிண்டி, சைதாப்பேட்டை இடையே உயா் அழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவையில் திங்கள்கிழமை பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் அவதியடைந்தனா். சென்னையில் புறநகா் மின்சார ரயில் சேவையில் தினம... மேலும் பார்க்க