மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
நின்றிருந்த லாரியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே போலீஸாா் ரோந்து பணியின்போது கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் 7 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் செட்டியப்பனூா் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டறம்பள்ளி - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வெளிமாநில பதிவு எண் கொண்ட லாரி நிறுத்தப்பட்டிருந்தது.
சந்தேகம் ஏற்பட்டு அருகில் சென்றபோது லாரியின் அருகில் நின்றிருந்தவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பித்னா்.
லாரியை சோதனையிட்டதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திச் செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. 7 டன் ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இது குறித்து வாணியம்பாடி குடிமைப்பொருள் குற்றப்புலானய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.