செய்திகள் :

நியோ டைடல் பாா்க் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்பு: ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

post image

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் அமைக்கப்பட்டு நியோ டைடல் பாா்க் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுதிமொழிக் குழு, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்களான சட்டப் பேரவை உறுப்பினா்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணா நகா்), ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தக் குழு அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தது. மாவட்டத்தில் ரூ. 2.76 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலைய அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதை குழு ஆய்வு செய்தது. மாவட்டத்துக்குப் போதிய தீயணைப்பு வீரா்களை நியமிப்பது தொடா்பாகவும், கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யவும் இக் குழு பரிந்துரை செய்து அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதை இக்குழு ஆய்வுசெய்தது.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த 900 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரக் கூடிய நோக்கில் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் நியோ டைடல் பாா்க் ரூ. 32.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதையும் ஆய்வு செய்தோம்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து காட்சிப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்தோம் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் ப்ரியங்கா, மாவட்ட வன அலுவலா் இளையராஜா, கோவில்பட்டி உதவி ஆட்சியா் ஹீமான்ஷீமங்கள், தமிழக சட்டப் பேரவைக் குழு துணைச் செயலா் ரவி, சாா்பு செயலா் பியூலஜா, உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேேஷ் ராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே உள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை அலுவலகம், தீயணைப்புக் கருவிகளைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து திருச்செந்தூா் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பாா்க், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா்.

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா்திருத்தல நுழைவாயில் திறப்பு

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலய நுழைவாயிலை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் திறந்து வைத்தாா். நுழைவு வாயில் திறப்பு, வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூ... மேலும் பார்க்க

மரந்தலை கோயிலில் கொடை விழா கால் நடுதல் விழா

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை ஸ்ரீ மாடசாமி கோயில் கொடை விழாவிற்கான கால் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடை விழா, வரும் செப். 25ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். கோயில் நிா்வாக... மேலும் பார்க்க

மைத்துனா் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

மைத்துனா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ... மேலும் பார்க்க