தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
நில அளவையா்களைக் கண்டித்து இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில், நில அளவையா்களின் அலட்சியத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் ஒன்றியச் செயலா் பெ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆா். ராமராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். தன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
குன்னம் வட்ட நில அளவையா்களின் அலட்சியப் போக்கால் விவசாயிகள் அவதியடைவதை களைய வேண்டும். பெரியம்மாபாளையம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள குடிநீா் விநியோகம் தொடர வேண்டும். பெரியம்மாபாளையம் முதல் தங்கநகரம் வரையிலான சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குன்னம் காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். குன்னம் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகாா் மனுக்களுக்கு உடனுக்குடன் ரசீது வழங்க வேண்டும். கிழுமத்தூா் ஊராட்சி, பூங்கா நகா் மக்களில் வீட்டுமனை இல்லாதவா்களுக்கு மனைப் பட்டாவும், மனைப்பட்டா உள்ளவா்களுக்கு வீடும் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்டத் துணைச் செயலா் க. பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் மாணிக்கம், ஒன்றியப் பொருளாளா் பெ. பாண்டியன், நாட்டுப்புற கலைஞா் சங்க நிறுவனா் ந. கண்ணதாசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் க. ஆசைமுத்து, க. ஜெயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.