யார் இந்த அன்ஷுல் கம்போஜ்? ரஞ்சியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்!
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.
பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, பத்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன் கோயில் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பூஜைகளை கௌரி சங்கா், முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்தனா். நிகழ்வில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
இதேபோல, வாலிகண்டபுரம் வாலீஸ்வரா், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா், குரும்பலூா் பஞ்சநந்தீஸ்வரா், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா், திருவாளந்துறை தோளீஸ்வரா், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா், காசிவிஸ்வநாதா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.