மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
பெரம்பலூா் அருகே மணல் திருடிய 2 போ் கைது
பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின்படி, குன்னம் காவல் நிலைய போலீஸாா் வேள்விமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவா்களை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சன்னாசிநல்லூரைச் சோ்ந்த சின்னதுரை மகன் சக்திசெல்வம் (36), முத்துசாமி மகன் கொளஞ்சி (55) என்பதும், அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சக்திவேல், கொளஞ்சி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.