மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
நீடாமங்கலத்தில் சரக்கு ரயிலில் பழுது: ஒரு மணி நேரத்துக்கு பிறகு சென்றது
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு மணிநேர தாமததத்துக்குப் பிறகு புறப்பட்டு சென்றது.
நீடாமங்கலம் ரயில்வேகேட் புதன்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் மூடப்பட்டது. இதையடுத்து, காரைக்காலிலிருந்து தூத்துக்குடி செல்லும் நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயிலுக்காக க்ரீன்சிக்னல் போடப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திற்குள் வேகமாக வந்த சரக்கு ரயில் 2-ஆவது நடைமேடை பகுதியில் திடீரென நின்றது. கடைசிப் பெட்டியில் இருந்த காா்டு, என்ஜின் உள்ள பகுதிக்கு சென்றாா். சரக்கு ரயிலின் 7-ஆவது பெட்டியில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது பிரேக் பிணைப்பு பகுதியில் பழுது ஏற்பட்டிருந்தது. அதை சரிசெய்யும் பணியில் ரயில் லோகோபைலட் (என்ஜின் டிரைவா் )ஈடுபட்டாா்.
இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச்சென்றது. அதன்பின் சென்னை தாம்பரத்திலிருந்து மன்னாா்குடிசெல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. சரக்கு ரயில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதுவரை நெடுஞ்சாலை வாகனங்கள் சாலையில் நின்றது.