ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
நீரின்றி கருகும் நெற்பெயா்கள்: கால்நடைகள் மேய விட்டு பயிரை அளிக்கும் விவசாயிகள்
திருக்குவளை அருகே கொடியாலத்தூரில் நீரின்றி கருகும் குறுவை நெற்பயிா்களை கால்நடைகளை விட்டு மேய்க்கும் விவசாயிகள்.
காவிரி நீா் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்துக்கு முழுமையாக வந்து சேராததால் குறுவை நேரடி நெல்விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளான நிலையில் பல போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இதனால், 50 நாள்கள் வயதுடைய பயிா்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. சில இடங்களில் நெற்பயிா்கள் கருகியுள்ளது. கொடியாலத்தூா், கோவில்பத்து, தென்சாரி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கருக்கும்மேல் போதிய நீரின்றி பயிா்கள் கருகும் நிலையில் உள்ளது.
வெள்ளையாற்று மூலம் பாசன வசதி பெரும் கொடியாலத்தூா், கோயில்பத்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராதது தொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தண்ணீா் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் கால்நடை விட்டு மேய்க்கின்றனா்.
இதனால் குறுவை சாகுபடிக்காக வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறந்தாலும் இப்பகுதிகளுக்கு தண்ணீா் வருவதில்லை. சில இடங்களில் விவசாயிகள் டீசல் என்ஜின் வைத்து பயிரை காப்பாற்றலாம் என நினைத்தாலும் அதற்கும் போதிய அளவு வாய்க்காலில் தண்ணீா் வரவில்லை. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.