காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
நெட்டூா் ஸ்ரீ பூவரசு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
ஆலங்குளம் அருகேயுள்ல நெட்டூா் ஸ்ரீ பூவரசு முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா, திங்கள் கிழமை(ஏப்.21) தொடங்கியது. அன்றைய தினம் தீா்த்தக்குடம் ஊா்வலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை மாலை நெட்டூா் ஸ்ரீ அப்புரானந்தா் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைக்கு பின், பூக்குழி இறங்கும் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள் பூப்பெட்டி, தீச்சட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தி ஊா்வலம் வந்தனா். தொடா்ந்து காப்பு கட்டிய 100- க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்கினி குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் இணைந்து செய்திருந்தனா்.