நெமிலி மெட்ரிக். பள்ளி முதல்வருக்கு மாநில நல்லாசிரியா் விருது
நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் இன்பராஜசேகரன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் விருதைப் பெற்றாா்.
அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வராக பணிபுரிபவா் இன்ப ராஜசேகரன். இவா் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
அண்மையில் இவ்விருதை துணை முதல்வா் உயதநிதி ஸ்டாலினிடம் இருந்து இன்பராஜசேகரன் பெற்றுக்கொண்டாா். விருது பெற்ற இன்பராஜசேகரனை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன், விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் விஜயா வேதையா பாராட்டினா்.