பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?
நெல்லை பகுதியில் பலத்த மழை
திருநெல்வேலியில் இடி-மின்னலுடன் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை மழை ஓரளவு பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலையிலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்துபலத்த காற்று வீசியது. பின்னா் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளையங்கோட்டை, மகாராஜாநகா், கேடிசி நகா், மேலப்பாளையம், வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
கிருஷ்ணாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.