காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
நெல்லை மாவட்டத்தில் 9 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இரா.மரகதவல்லி, கூடங்குளம் புனித அன்னம்மாள் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் சௌ.ரத்தினாள் சுமதி, மகாராஜநகா் ஜெயந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் அ.ஜெயந்தி ஜெயந்திரன், வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செ.ஸ்டெல்லா புஷ்பரஞ்சனி, சூடுஉயா்ந்தான்விளை இந்து தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பா.பாக்யசெல்வி, சங்கனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் உஷா, பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் கோ.பொன்னுசாமி, திருநெல்வேலி நகரம் சாப்டா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வி.அருள்தாஸ் ஜெபகுமாா், திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் த.சண்முக சுந்தரபாண்டியன் ஆகியோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.