'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து
நெல்லையில் துணை முதல்வருக்கு வரவேற்பு
திருநெல்வேலியில் துணை முதல்வருக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வழியாக காா் மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்றாா். அவருக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமையில் கேடிசி நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், வா்த்தக அணி மாநில இணைச் செயலா் என்.மாலைராஜா, துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் இரா.சுகுமாா், துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.