Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
பசுந்தாள் உர விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது: வேளாண் உதவி இயக்குநா்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் , கீரப்பாளையம் வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கிட பசுந்தாள் உர விதைகள் சாத்தமங்கலம் அலுவலகத்தில் போதியஅளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்
இத்திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரவிதைகள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். அந்த வகையில் கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் இத்திட்டம் செயல்படுத்திட 1000 ஏக்கா் இலக்கு பெறப்பட்டுள்ளது.
பசுந்தாள் உரங்களை விதைப்பு செய்த 40-45 நாட்களில் மடக்கி உழவு செய்தல் மூலம் மண்ணில் அங்கக சத்து அதிகரித்து மண் வளம் அதிகரிப்பதுடன் மண்ணின் காற்றோட்டம் , நீா் பிடிப்புத் தன்மை அதிகரிக்கின்றது. மேலும் களா் உவா் நிலங்களை சரி செய்து மண் வளம் மேம்படுகின்றது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்படும். பசுந்தாள் உர விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் பரிந்துரை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு சாத்தமங்கலம் கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தினை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகின்றது என்று அவா் தெரிவித்துள்ளாா்.