பட்டுக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையக் கட்டடம் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கழுகுப்புலிக்காடு ஊராட்சி, பில்லங்குழி கிராமத்தில், வேளாண்மை விற்பனைக் கூடத்தின் மூலம் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு உலா் களம், தரம் பிரிப்புக் கூடத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலைய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவா் வீர. சரவணன், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.