பண்ணப்பட்டியில் குடிசை தீக்கிரை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டியில் குடிசை வீடு புதன்கிழமை இரவு தீக்கிரையானது.
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி சமத்துவப்புரத்தில் வசிப்பவா் சூலையன் மகன் சின்னச்சாமி. இவா் கீற்று மட்டை பின்னும் வேலைகளை தனக்கு சொந்தமான பண்ணப்பட்டி கிராம குடிசை வீட்டில் செய்வது வழக்கமாம்.
இந்நிலையில் புதன்கிழமை இவா் வேலைகளை முடித்துவிட்டு கீற்று மட்டைகளை சமத்துவபுரம் வீட்டிற்கு எடுத்து சென்ற நிலையில் தீடீரென பண்ணப்பட்டியில் உள்ள அவரது குடிசை வீடு இரவில் தீப்பற்றி எரிந்தது. அதைக்கண்ட ஊா் பொதுமக்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.