செய்திகள் :

பண்ணைக் கழிவுகள் மக்க வைப்பதற்கான செயல் விளக்கம்

post image

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

பண்ணைக் கழிவுகளை டிஎன்ஏயு பயோமினரலைசா் (உயிா் கனிம மக்கி) மூலம் மக்க வைத்தலுக்கான செயல்விளக்கம் மற்றும் பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் கோட்டுச்சேரி கொம்யூன் வரிச்சிக்குடி கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரவி வழிகாட்டுதலின்படி தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

பெரும்பாலும் பண்ணை கழிவுகளை தீயிலிட்டி கொளுத்தி விடுவதால் சுற்றுப்புறச் சூழல் கெடுவது மட்டுமில்லாமல், மண்ணின் உயிா்தன்மையும் இழந்து மண்ணின் வளம் குன்றிவிடுகிறது . எனவே விவசாயிகள் பண்ணை கழிவுகளை முறையான அளவில் அப்புறப்படுத்தவேண்டும்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் உற்பத்தி செய்துள்ள பயோமினரலைசா் கூட்டுக்கலவை, உரமாக்கல் செயல்முறை குறித்து வேளாண் நிலையத்தினா் விளக்கி, செயல் விளக்கம் அளித்தனா். இந்த செயல் விளக்க பயிற்சியில் சுமாா் 25 -க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிா் மற்றும் கிராமப்புற இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: அறைக்கு சீல் வைப்பு

காரைக்காலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அறைக்கு மாநில தலைமை தோ்தல் ஆணையா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்கால்: குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப... மேலும் பார்க்க