பரம்பூா் காட்டில் தீ: 20-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் சேதம்
பரம்பூா் வேளாண் விவசாய காட்டில் புதன்கிழமை திடீரென தீப்பற்றியதில் இருபதுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் சோ்ந்தகரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காட்டுப்பகுதி உள்ளன.
இந்நிலையில், சோ்ந்தகரை காட்டுப் பகுதியில் வளா்ந்து கிடந்த செடி கொடிகள், பனை மரங்கள் புதன்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தன. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். ஆனாலும், இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து கருகின.