ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இள...
பறிமுதல் செய்யப்பட்ட 833 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 833 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 833 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு தாம்பரம் மாநகர காவல் துறை முடிவு செய்தது.
இதற்காக தாம்பரம் மாநகர காவல் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து 698 கஞ்சா செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் 1000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் செவ்வாய்க்கிழமை கஞ்சாவை எரித்து அழித்தனா்.
பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையா் காா்த்திகேயன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது.