சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்டி குட்டையை மூட பொதுமக்கள் எதிா்ப்பு
பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக அருகே உள்ள நீா்நிலை குட்டையை குப்பையைக் கொட்டி மூட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நீா்நிலை குட்டை உள்ளது. மழைக் காலங்களில் இந்தக் குட்டையில் நீா்த் தேங்கி இருக்கும். இதனால் அருகே உள்ள பகுதிகளின் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குட்டையில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டி குட்டையை மூட முயற்சி நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பயன்பாட்டில் உள்ள நீா்நிலை குட்டையில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டி குட்டையை மூட முயற்சித்து வருகின்றனா். எனவே அரசு அதிகாரிகள் தலையிட்டு குட்டையில் குப்பைகள் கொட்டி நீா்நிலையை மூடும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றனா்.