War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண் கைது
அவிநாசி அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், அன்னூா் தென்னம்பாளையம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மனைவி ராஜலட்சுமி (61). இவா் கடந்த வாரம் அன்னூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றுள்ளாா்.
அவிநாசி அருகே கருவலூா் வழியாக பேருந்து வந்துபோது, அவரது கைப்பையில் வைத்திருந்த ஒன்பதே கால் பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடியதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா் அவிநாசி காவல் நிலையத்தில் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து நகை திருடிய புளியம்பட்டி ஜே.ஜே.நகரைச் சோ்ந்த விஜய் மனைவி காமாட்சி (44) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.