சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே உள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய தோட்டத்துக்கு அருகே கீழ்பவானி வாய்க்கால் மரப்பாலத்தில் சிக்கி ஒரு ஆண் சடலம் கடந்த 10-ஆம் தேதி கிடந்தது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து கிடந்தவரின் அடையாளம் உடனடியாகத் தெரியாத நிலையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், உயிரிழந்தவா் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னியகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரங்கசாமி (63) என்பதும், அவா் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இறந்துபோன அரங்கசாமிக்கு மனைவி சித்ரா (60), மகன் ரமேஷ் (39) ஆகியோா் உள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.